---Advertisement---

ஜேம்ஸ் வசந்தன் மேல் செம கடுப்பில் இளையராஜா ரசிகர்கள்

Published on: September 27, 2021
---Advertisement---

இளையராஜா பற்றி ஏற்கனவே இரண்டு முறை சில விமர்சனங்களை செய்து, இணையத்தில் உள்ள இளையராஜா ரசிகர்களால் கழுவி கழுவி ஊற்றப்பட்டார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தனது சமூக வலைதள பதிவில் ஒரு வில்லங்க ஸ்டேடஸை போட்டு மறுபடியும் இளையராஜா ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார்.

நேற்று முன் தினம் இளையராஜா தனது நண்பர் எஸ்.பி.பியின் நினைவு நாளில் அவரை போற்றி புகழ்ந்து புகழாரம் சூட்டி மேடையில் பேசினார்.

இந்த நிலையில் ஜேம்ஸ் வசந்தன் எழுதிய ஸ்டேடஸில் இளையராஜா பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ஒருவர் இருக்கும்போது அவரை திட்டிவிட்டு அவர் இல்லையென்று ஆன பின் அவரை போற்றி புகழ்வது என்ன மாய்மாலம் என ஜாடையாக ஒரு ஸ்டேட்டஸ் இட்டுள்ளார்.

இந்த பதிவு இளையராஜா ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பேசு பொருளாகி உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க