தற்போது பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. முறையற்ற பாலியல் ரீதியான உறவுகளும் , முறையற்று பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. 6,7 வயது சிறுமிகளை கூட சில காமுகர்கள் விடாமல் துன்புறுத்துகிறார்கள்.
அப்படித்தான் கடந்த வருடம் சென்னை ராயபுரத்தில் 9 வயது சிறுமி ஒருவருக்கு உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி உடனே தன் தாயிடம் சொல்லியதால் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கப்பட்டு அவ்வழக்கில் அந்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் படத்தை பார்த்து அதில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்பட்டால் எதையும் மறைக்க கூடாது என்ற காட்சியை பார்த்தே தன் தாயிடம் அந்த பெண் சொன்னாராம் அதனால்தான் அவருக்கு தற்போது தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.







