ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்திய பின்னர், காபூல் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானில் இருந்து முதல் விமானம் வந்து இறங்கியது.
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அரசின் புதிய இடைக்கால தலைவராக முல்லா முகமது ஹசன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுவிட்ட பின்னர் முதல் சர்வதேச வணிக விமானமாக காபூல் விமான நிலையத்தில் ஒரு சில பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் (PIA) வந்து இறங்கியது. இஸ்லாமாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சுமார் 10 பேர் இருந்ததாக ஏபிஎப் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.













