ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு அவரின் அண்ணாத்தே பட பர்ஸ்ட் லுக் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வெளியானது. இதை கொண்டாடும் வகையில் அவரது போஸ்டருக்கு ரத்த பலி கொடுப்பதற்காக ஒரு ஆட்டை வெட்டி சில ரசிகர்கள் பலி கொடுத்துள்ளனர்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் அல்லாத பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு அஹிம்சவாதியாக கருதப்படும் ரஜினி இதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருப்பது வருத்தத்திற்குரிய விசயம் என சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டை எதிர்த்து போராடிய விலங்குகள் நல வாரியமான பீட்டா இந்தியா அமைப்பு இந்த ஆடு வெட்டி பலி கொடுத்த ரஜினி ரசிகர்களுக்கு தன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.









