தமிழில் ஜெயம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவர் பல தெலுங்கு படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக சீட்டிமர் என்ற படத்தில் நடித்துள்ளார். அதிரடி படமான இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்த நிலையில் திரையிட்ட இடங்களில் ஓரளவு வசூலை வாரி குவித்து வரும் இப்படம் மேலும் வெற்றி பெற்று ப்ளாக்பஸ்டர் படமாக அமைய கைரதாபாத்தில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டுள்ளனர்.







