---Advertisement---

வாணியம்பாடி கொலை- காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published on: September 13, 2021
---Advertisement---

வாணியம்பாடியில் நேற்று முன் தினம் மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி வாசிம் அக்ரம் என்பவர் அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகை செய்து விட்டு வரும்போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

இவரது உடலை உடனே வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு அங்குள்ளவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதற்காக வேலூர் அனுப்பினீர்கள் என அங்குள்ள போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட வாசிம் அக்ரமுக்கும் அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் டீல் இம்தியாஸ் உட்பட இருவரால் தொடர் தொல்லை பகை இருந்து வந்துள்ளது. இது பற்றி தெரிவித்தும் காவல்துறையில் புகார் எடுக்கவில்லை.

இதனால் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.