ஹிந்து மக்கள் போற்றி வணங்கும் கடவுள்களில் கிருஷ்ண பரமாத்மாவும் ஒருவர். விஷ்ணுவின் அவதாரமே ராம அவதாரமாகவும், கிருஷ்ண அவதாரமாகவும் கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய கருத்துக்களே பகவத் கீதையாக ஹிந்து மக்களின் புனித நூலாக கருதப்படுகிறது.
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண பரமாத்மா பிறந்ததாக கருதப்படுகிறது. அவர் உ.பியில் உள்ள மதுரா நகரில் பிறந்தார்.
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த ஊரான மதுரா மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் மதுரா நகரின் சிறைவளாகமும் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.







