பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான இவர் எல்லோராலும் அறியப்பட்டவர். ஹாலிவிட்டில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் மிஷன் இம்பாஸிபிள் இப்படத்தின் 7வது பாகத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் இங்கிலாந்து வந்துள்ளார். வந்த இடத்தில் இவரின் பிஎம்டபிள்யூ கார் அவரது உடைமைகளுடன் திருட்டு போனது.
இந்நிலையில் காரில் ஜிபிஎஸ் கருவி இருந்ததால் கார் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடைமைகள் மட்டும் மீட்க முடியவில்லை போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.







