ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்கு முன் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். 20 ஆண்டு காலமாக நடந்து வந்த மக்களாட்சி முடிவுக்கு வந்தது.இதனால் ஆப்கான் அதிபர் உட்பட பலர் வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் சில நாட்கள் முன் அதிபர் அஷ்ரப் கானியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சையத் அகமத் ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்கு அமைச்சராக இருந்தோம் என்பதை மறந்து பீட்ஸா டெலிவரி வேலையை செய்து வருகிறார்.
இந்த வேலை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.













