வேலூர் மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகன் திமுக முன்னாள் தலைவரான கருணாநிதி காலத்தில் இருந்து மூத்த அரசியல்வாதியாக உள்ளார். தற்போதும் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இவர் தொடர்கிறார்.
இந்நிலையில் இன்று துரைமுருகன் குறித்து பேசிய ஸ்டாலின் எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் துரைமுருகன் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துபவர்.
கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார். அவையை சிரிக்க வைக்க அழ வைக்க அவருக்குதான் திறமை உள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.













