---Advertisement---

மம்முட்டி மோகன்லாலுக்கு கோல்டன் விசா

Published on: August 21, 2021
---Advertisement---

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.சினிமா தவிர இவர்கள் அரபு நாடுகளில் தொழில்களும் செய்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும். இந்த கோல்டன் விசா தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு அந்நாட்டு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவது இதன் சிறப்பம்சம்.

இந்த கோல்டன் விசா ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த விசா வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்துள்ளது. மலையாள நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரஜினிகாந்த் போஸ்டருக்கு மகா சிவராத்திரி பூஜை சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

மங்காத்தா திரையிடலில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி மற்றும் ரசிகர் தாக்குதல்

தவெக கொடி ஏற்றிய ரசிகர் மீது தாக்குதல்: மோசமான வன்முறை!

பார்த்திபன் மற்றும் சீதா புகைப்படங்கள் - மீண்டும் இணைவது குறித்த வதந்திகள் மற்றும் விளக்கம்.

“மனைவி ஸ்தானம் அவருக்கு மட்டும் தான்!” பார்த்திபன் – சீதா மீண்டும் இணைகிறார்களா? வைரலாகும் பின்னணி!