---Advertisement---

அட்டகாசப்படுத்தும் விக்ரமின் மகான் லுக்

Published on: August 21, 2021
---Advertisement---

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், தலைப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. ‘சீயான் 60’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் படங்கள் நல்ல ஸ்டைலாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்துக்கு மகான் என பெயரிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.