---Advertisement---

நினைத்ததை நிறைவேற்றும் கருட பஞ்சமி

Published on: August 13, 2021
---Advertisement---

இன்று நினைத்ததை நிறைவேற்றும் கருட பஞ்சமி. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமி என அழைக்கிறார்கள். இந்த நாளில் பெருமாளை காக்கும் கருடனை நாம் வழிபட்டால் நமக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கும் நம் தேவைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலில், நாராயணருக்கு அருகில் இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்களை ‘நித்ய சூரிகள்’ என்று அழைப்பார்கள். அதில் முக்கியமானவர், கருடன். பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடாழ்வார், விஷக்கடிகளை தீர்க்கும் வல்லமை படைத்தவர்.

கருடனுக்குரிய முக்கிய நாளான இன்று கருடனை எண்ணி துதித்தால் நாம் நினைத்தவை நடக்கும் என்பது நம்பிக்கை.

கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலேயே பூஜை அறையில் கருடன் மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யலாம் நற்பலன்கள் கிடைக்கும்.

தற்போதுள்ள கொரோனா போன்ற பிரச்சினைகளுக்கு கருட பகவானை வழிபட்டாலே விஷக்கிருமிகளை நீக்கி விடுவார். யாரையும் பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.