தமிழில் மிகப்பெரும் நடிகர் விஜய் அது போல் தெலுங்கில் மிகப்பெரும் நடிகர் மகேஷ்பாபு. மகேஷ்பாபு நடித்த பல படங்களின் ரீமேக்கில் விஜய் தமிழில் நடித்துள்ளார். போக்கிரி, கில்லி அதில் குறிப்பிடத்தக்கவை.

விஜய்யின் பிறந்த நாள் முடிந்து விட்டது. மகேஷ்பாபுவின் பிறந்த நாள் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி வருகிறது. அதை ஒட்டி மகேஷ்பாபுவையும் விஜயையும் இணைத்து போஸ்டர் ஒன்றை தயாரித்துள்ளார்கள்.
இரு சூப்பர் ஸ்டார்கள் ஒரு காரில் போனால் எப்படி இருக்கும் என்பது போன்ற அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Wahhhh !! Saw this jus NOOOW !! #ThalapathyVijay #SuperstarMahesh #SuperStarBirthdayBLASTER 🧨🎬🎧🏆💿 pic.twitter.com/YqbGGkQYDS
— thaman S (@MusicThaman) August 6, 2021







