சினிமாவில் 40 வருடத்தை கடந்த கார்த்திக்

சினிமாவில் 40 வருடத்தை கடந்த கார்த்திக்

தமிழ் சினிமாவில் 80களில் க்யூட்டான நடிகராக அறியப்பட்டவர் நடிகர் கார்த்திக். அந்தக்கால நடிகரான முத்துராமனின் வாரிசான கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. விளையாட்டுப்பையனாக இருந்த கார்த்திக்கை இயக்குனர் பாரதிராஜா தனது அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வைத்தார்.

எண்பதுகளில் மிக பிரபலமாக வலம் வந்த நடிகர் கார்த்திக் நடித்த வருஷம் 16, கிழக்கு வாசல், பாண்டி நாட்டு தங்கம், பெரிய வீட்டு பண்ணக்காரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.

அதுவும் பாஸிலின் இயக்கத்தில் கார்த்திக், குஷ்பு நடித்த வருஷம் 16 படத்தை எல்லாம் கார்த்திக்கின் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். காலத்திற்கும் மறக்க முடியாத திரைப்படம் அது.

நேற்றுடன் அதாவது 18 ஜூலையான நேற்றுடன் கார்த்திக் நடிக்க வந்து 40 வருடமாகிறதாம்.

வாழ்த்துக்கள் கார்த்திக் சார்.