கே.பி சுந்தராம்பாளின் சாபம்- விநியோகஸ்தர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்

17

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் பல வருடங்களாக திரைப்பட விநியோகத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு முறை கோவையை சேர்ந்த ஒரு பட டிஸ்ட்ரிப்யூட்டர் தொழிலில் நேர்மை முக்கியம் கொடுத்த வாக்கு முக்கியம் கரெக்டா செய்ய வேண்டும் என அட்வைஸ் செய்தாராம்.

நான் அப்டிதான் கரெக்டா இருப்பேன் என சொன்ன சுப்ரமணியனிடம் அவர் ஒரு கதை சொன்னாராம்.

நாங்க கோயமுத்தூர்ல பெரிய பட டிஸ்ட்ரிப்யூட்டரா இருந்தோம் நல்ல வருமானம் வந்தது. கே.பி சுந்தராம்பாளின் தியேட்டர் ஒன்று கொடுமுடியில் இருந்தது அந்த தியேட்டருக்கு எம்.ஜி.ஆர் நடித்த ரிக்‌ஷாக்காரன் படத்தை தருவதாக பேசி 5000 அட்வான்ஸாக வாங்கி விட்டோம். முதல் நாள் அந்த அம்மா காரில் வந்து நாளைக்கு படம் வந்துரும்ல என்று விசாரித்து சென்றார்கள் வந்து விடும் என்று உறுதி கொடுத்துவிட்டு அடுத்த நாள் கூடுதலாக பேசிய பக்கத்தில் இருக்கும் இன்னொரு புதிய தியேட்டருக்கு படத்தை கொடுத்து விட்டோம். அடுத்த நாள் கே.பி சுந்தராம்பாள் அம்மா நேரில் வந்தாங்க, நேற்று என்ன சொன்னிங்க என் தியேட்டருக்கு படம் தர்றேன்னு சொல்லிட்டு இப்படி செய்யலாமா என்று கேட்டார்கள், நாங்களும் இதெல்லாம் சகஜம் நீங்க கொடுத்த 5000 அட்வான்ஸ திருப்பி வாங்கிக்கங்க என்று அசால்டாக சொன்னோம் உடனே அந்த அம்மாவிற்கு கோபம் வந்து விட்டது சுருக்கு பையில் வைத்திருந்த விபூதியை எடுத்து, காசு முக்கியமல்ல கொடுத்த வாக்கும் தொழிலில் நேர்மையும்தான் முக்கியம் என சொல்லி கையில் எடுத்து கோபத்துடன் இந்த கம்பெனி விளங்காது என விபூதியை எடுத்து சாபமிட்டு சென்றார்களாம் .

பாருங்க:  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தர்ஷன்? - அதிர்ச்சி செய்தி

அத்துடன் அந்த கம்பெனி சரிய தொடங்கி மிக மோசமாகி விட்டதாம். கடும் நஷ்டம் ஏற்பட்டு அத்துடன் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனியை மூடிவிட்டார்களாம். இந்த கதையை சுப்ரமணியத்திடம் சொல்லிய நண்பர் அதனால் எப்பவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் கொடுத்த வாக்கை சரியாக நிறைவேற்றுபவராகவும் இருங்கள் என சொல்லி அனுப்பி வைத்தாராம்.

இந்த சம்பவத்தை திருப்பூர் சுப்ரமணியம் சொல்லி காட்டினார்.

Previous articleசினிமாவில் 40 வருடத்தை கடந்த கார்த்திக்
Next articleசூர்யா 40 பர்ஸ்ட் லுக் 22 மாலை