---Advertisement---

நடிகர் விமர்சகர் வெங்கட்சுபா மரணம்- நண்பர் சிவா உருக்கம்

Published on: May 29, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் அம்மா கிரியேசன்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா இவரின் நண்பர் அம்மா கிரியேசன்ஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமல்லாது விமர்சகராகவும் டூரிங் டாக்கீஸ் யூ டியூப் சானலில் பணிபுரிந்தார். சில நாட்களாக கொரோனாவால் உடல் நலம் குன்றி இருந்த வெங்கட் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பர் அம்மா கிரியேசன்ஸ் சிவா வெளியிட்ட உருக்கமான இரங்கல்.

“வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள், ஆயிரமாயிரம் நினைவுகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை, திட்டங்களை, கனவுகளையும் அழித்துவிட்டது.

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு. ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கரோனாவுக்கு என் உடன்பிறந்த சகோதரணை பறிகொடுத்தேன். இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறிகொடுத்துவிட்டேன். வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா. இந்த கரோனாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும், உறவுகளும் நண்பர்களும், நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு போராடியது. ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட். கரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட். தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு. உன்னை தினம் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு டி சிவா ” என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official emotional statement image of Actor Jayam Ravi under his name Ravi Mohan thanking fans and media.

“நாளுக்கு நாள் வலிமையாகி வருகிறேன்!”.. ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிரவைத்த ஜெயம் ரவியின் புதிய பதிவு.. நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி கூறி ரவி மோகன் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை!

Official trailer launch banner of legendary director Singeetam Srinivasa Rao's upcoming movie Sing Geetham.

மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பு!.. மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ள ‘சிங் கீதம்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட விசுவல்ஸ்!

Official release date announcement poster of Actor Karthi's spy action thriller Sardar 2 directed by PS Mithran.

“மிஷன் ஆஃப் எ லைஃப்… டைம்!”.. கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட பிரம்மாண்ட ஸ்லைடு.. செப்டம்பர் 10-ல் மிரட்டலாக வரும் ஏஜெண்ட்!

Official announcement title look first look banner of Superstar Rajinikanth's Dharman produced by Kamal Haasan RKFI banner.

“தர்மமே வெல்லும்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாக வெளியீடு.. ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட மெகா மாஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Arya sharing official updates about Sarpatta Parambarai 2 shooting timeline during Anantha Kaadu movie press meet.

“கபிலன் மீண்டும் வர்றான்!”.. ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு எப்போது?.. ‘அனந்தன் காடு’ பிரஸ்மீட்டில் ஆர்யா உடைத்த மெகா ரகசியம்.. குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பும் பா. ரஞ்சித் டீம்!

Official announcement poster of Vikram Prabhu 26th movie presented by Romeo Pictures and composed by Yuvan Shankar Raja.

“காஸ்ட்லியஸ்ட் ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா!”.. விக்ரம் பிரபுவின் 26-வது படத்திற்குப் போடப்பட்ட மெகா பட்ஜெட் பிளான்.. நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி மியூசிக் ட்ரீட்!