தற்போது ஊரடங்கு என்பது தொடர்கதையாகி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தினம் தோறும் எழுந்து அன்றாட வேலைகளை பார்த்து நாலு காசு பணம் சம்பாதித்து குடும்பத்தை பார்ப்பதென்ற நிலையே இல்லை.
ஊரடங்கால் பலரும் கடும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சச்சின் பட இயக்குனரும் இயக்குனர் மகேந்திரனின் மகனுமான ஜான் மகேந்திரன் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது.
இருபத்தியொரு நாள் வீட்டுக்குள்ளேயே இருக்கவே இத்தனை புலம்புகின்றோமே, ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு காடுகளை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் அசுர பலம் கொண்ட இவற்றின் நிலையை எண்ணிப் பாருங்கள். உண்மையான மிருகம் யார் என்பது உங்களுக்கே புரியும் என குறிப்பிட்டுள்ளார்.
இருபத்தியொரு நாள் வீட்டுக்குள்ளேயே இருக்கவே இத்தனை புலம்புகின்றோமே,
ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு காடுகளை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் அசுர பலம் கொண்ட இவற்றின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
உண்மையான மிருகம் யார் என்பது உங்களுக்கே புரியும்…… pic.twitter.com/oFZrQoLkoh— John Mahendran (@Johnroshan) May 22, 2021







