சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் சவுந்தர்யா. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆனவர் என்பதால் இவருக்கு ரசிகர் வட்டம் அதிகம்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட் இட்ட கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு இவர் நல்ல சூடு கொடுத்துள்ளார். அவர் எழுதிய கருத்தை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் கல்லூரி நிர்வாகத்துக்கும் அனுப்பியுள்ளார்.
அதை தனது பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். அவரது கணக்கை முடக்குமாறு இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு புகார் அனுப்பியுள்ளார்.







