கோகிலா என்ற கன்னட படம் மூலம் அறிமுகமான மோகன் தமிழில் மூடுபனி படம் மூலம் அறிமுகமானார் இருப்பினும் இவர் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம்தான் கதாநாயகனாக அறிமுகமானார்.
எண்பதுகளின் மத்தியில் மோகன் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை என்ற அளவுக்கு மோகனின் படங்கள் வந்து குவிந்தன.
பல ப்ரோட்யூசர்கள் கையில் சூட்கேஸை வைத்துக்கொண்டு மோகனுக்காக தவம் கிடந்தனர் .இவர் நடித்த எல்லா படங்களும் வெள்ளி விழா படங்களாக கொண்டாடப்பட்டன.
உதயகீதம், இதயக்கோவில், நான் பாடும் பாடல், மெல்ல திறந்தது கதவு என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்தார்.
எண்பதுகளின் இறுதியில் மோகன் நடித்த உருவம் படத்துடன் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அவர் நடிப்பில் கடைசியாக வந்த வெற்றிப்படம் பாசப்பறவைகள் திரைப்படமாகும்.
எண்பதுகளையே தன் கைக்குள் வைத்திருந்த மோகனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இவரது பிறந்த நாளையொட்டி பிரபல சினிமா பி.ஆர்.ஓ நிகில் முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy Birthday to the Happening ,EvereverGreen #SahasaNayagan#Mohan Sir
Happy to be Associated with U#NikilMurukan #NMNews23 #NM #NMTeakadaiCinema pic.twitter.com/MLllCHJqQp
— Nikil Murukan (@onlynikil) May 10, 2021








