பருத்தி வீரன் படம் கடந்த 2007ல் வெளிவந்து பயங்கர வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம். இவர் சமீபத்தில் காலமானார்.
இவரது மறைவு செய்தி கேட்ட நடிகர் கார்த்தி கீழ்க்கண்டவாறு தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு கார்த்தி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.







