தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை இயக்கியவர் சி.எஸ் அமுதன். இவரின் இரண்டு படங்களும் இதுவரை வந்த தமிழ்சினிமாக்களை கேலி செய்த படங்களாகத்தான் இருக்கும்.
முதல் படத்தில் கேலி செய்யாத தமிழ் படங்களை இரண்டாவது படத்தில் கேலி செய்து விட்டார் சி.எஸ் அமுதன்.
இந்த நிலையில் புதிதாக சி.எஸ் அமுதன் படம் இயக்குகிறார். விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து இவர் படம் இயக்க இருக்கிறார்.
படம் த்ரில்லர் கொஞ்சம் கமர்ஷியல் கொஞ்சம் கலந்து ஆக்சன் படமாக வருகிறது.







