குஷ்பு நடித்த இரண்டாவது படமான வருஷம் 16 படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக். அந்த படத்தின் வெற்றியை வைத்து இன்று வரை கார்த்திக் குஷ்புவை எவர்க்ரீன் ஜோடியாக மக்கள் மனதில் வைத்துள்ளனர்.
அதன் பின்பு கிழக்கு வாசல் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக இருவரும் நடித்துள்ளனர். குஷ்புவும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள். அது போல் குஷ்புவின் கணவரான சுந்தசிய்ம் கார்த்திக்குமே நெருங்கிய நண்பர்கள்தான் சுந்தர் சியின் படங்களில் கார்த்திக் தொடர்ந்து நடித்திருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு ஆதரவாக கார்த்திக் பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம். மனித உரிமை காக்கும் கூட்டணியில் குஷ்பு உள்ளார் அதனால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறேன் என குஷ்பு கூறியுள்ளார்.
குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

