கடந்த 1973ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பாக எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்து இயக்கி வெளியிட்ட படம். ரத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் ஒரு விஞ்ஞானி பற்றிய கதை. அந்த மருந்து ரகசியத்தை கேட்கும் வில்லன்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடக்கும் சண்டைதான் திரைக்கதையாக பல நாடுகளுக்கு பயணிக்கும். பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே அப்போதைய நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஜப்பான் என பல நாடுகளுக்கு பயணித்த இந்த படத்தின் கதை எல்லோருக்கும் பிடித்திருந்தது.
இந்த படம் வரும் கோடை விடுமுறைக்காக டிஜிட்டலில் தயார் செய்யப்பட்டு மீண்டும் வெளிவருகிறது.
எம்.எஸ். வி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.







