ஒரு பேட்டரி சார்ஜ் ஆக முன்பெல்லாம் நீண்ட நேரம் பிடிக்கும். தற்போதுள்ள நவீன தொழில் நுட்பங்களில் அரைமணி நேரம் ஒரு மணி நேரத்தில் கூட பேட்டரி சார்ஜ் ஆகி விடுகிறது.
அதிலும் இப்போது வேகமாக
இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் தலைமுறை லித்தியம் அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளது.
இந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 5 நிமிடங்களே ஆகும் என்கிறார் நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ஃப்.
வாகனங்களில் இந்த பேட்டரியை இயக்கி கொள்ளலாமாம். நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டுனர் பேட்டரி சார்ஜ் செய்ய ரொம்ப நேரம் ஆகுமே என்ற கவலையை மறக்கடிக்க கூடியது இந்த பேட்டரியாம்.













