மலையை தோண்ட தோண்ட தங்கமா ? அதிசயமான விசயம்தான் நம்ம ஊரில் என்றால் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும் இது நடந்தது காங்கோவில்
உள்ள கியூ என்ற மாகாணத்தில் லூஹி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள மலையில் அதிகளவு தங்க மணல் முழுவதும் நிறைந்து காணப்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் திரண்டனர்.
தங்களுக்கு வேண்டிய தங்கத்தை அவர்களே எடுத்து சென்று விட்டார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
அந்த கிராமத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றினர். தங்கச்சுரங்கத்தில் தங்கத்தை எடுக்கவும் தடை விதித்தனர். அந்த மலையில் ஏறக்குறைய 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தங்கம் நிறைந்து காணப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் தங்கத்தை வெட்டி எடுத்து செல்லும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.













