விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலை ஒட்டி தியேட்டரில் ரிலீஸ் ஆனது பின்பு ஜனவரி 29ல் ஓடிடியிலும் ரிலீஸ் ஆனது. இதில் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி.
இதில் விஜய் சேதுபதி மிரட்டிய கையோடு தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பெனா தெலுங்கு படமும் ரிலீஸ் ஆனது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிப்ரவரி 12-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் ‘உப்பெனா’. சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமானார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்தனர். முரட்டு வில்லனாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் இதுவரை 1000 கோடி வசூலை ஈட்டிவிட்டதாக படக்குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர் பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளனர்







