கார்த்தி, ரீமாசென் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் இடைவேளை வரை ஜாலியான கதையாகவும், இடைவேளைக்கு பிறகு புராணகால கதையாகவும் நகரும்.
இப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. பார்த்திபனின் நடிப்பு வித்தியாசமாக இருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க செல்வராகவன் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசையை டுவிட்டரில் வெளியிட்டும் இருந்தார்.
இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கவாய்ப்பு வந்து விட்டதாக அதன் 2 பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு போஸ்டரை அவர் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் செல்வராகவன் வெளியிட்ட அந்த போஸ்டர் ஆங்கிலத்தில் தயாரான புத்தகமான ஆர்ட் புக், மாத்தியூ லாப்ரேய் என்பதின் போஸ்டரை போலவேவுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
மாத்தியூ லாப்ரேயின் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் கூட இந்த ஓவியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.









