இளையராஜா 40 ஆண்டு காலம் இசையமைத்த இடம் பிரசாத் ஸ்டுடியோ. இது சென்னை சாலிகிராமத்தில் உள்ளது.. பல வித மெட்டுகளை இளையராஜா இங்கிருந்துதான் உருவாக்கினார்.
பிரசாத் ஸ்டுடியோவின் முந்தைய நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு சீரான நட்பு இருந்த நிலையில் தற்போதைய நிர்வாகம் இளையராஜாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
பிரசாத் ஸ்டுடியோவை நிர்வாகம் காலி செய்ய சொல்லி விட்டது. கோர்ட்டுக்கு சென்ற பின்னரும் இதற்கு சரியான தீர்வு எட்டப்படாத நிலையில் இளையராஜாவின் ரசிகர்கள் சென்னை சாலிகிராமம் பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் இளையராஜா இசை சொத்துக்களை சூறையாடிய பிரசாத் ஸ்டுடியோ கும்பலை கைது செய் பிரசாத் ஸ்டுடியோவை அரசுடமையாக்கு என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
#NewsUpdate | இளையராஜா பக்தர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு! #Sunnews | #ilayaraja | #prasadstudio pic.twitter.com/xBr7Ujywej
— Sun News (@sunnewstamil) January 1, 2021







