இசைஞானி இளையராஜா 40 வருடத்துக்கும் மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். நாம் கேட்கும் பெரும்பாலான பாடல்கள் இங்கிருந்து உருவானவையே ஆகும்.
சில மாதங்களுக்கு முன் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவை காலி செய்ய வேண்டும் என நிர்வாகம் தெரிவித்ததால் இது விஷயமாக கோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இளையராஜா கோரிய நிலையில் நீதிமன்றம் பிரசாத் ஸ்டுடியோவிடம் கேள்வி கேட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த பிரசாத் நிர்வாகம், நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு இளையராஜா தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
ஒரு இசைக்கலைஞர், உதவியாளர், வக்கீல் மட்டுமே உடன் வரவேண்டும் இன்று மாலைக்குள் தன் கைப்பட எழுதி நீதிமன்றத்தில் கொடுத்தால் உள்ளே அனுமதிப்பதாக இளையராஜாவுக்கு பிரசாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.








