நடிகர் சோனு சூட், நடிகர் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர். பல ஹிந்தி படங்களிலும் பல மொழி படங்களிலும் வில்லனாக நடித்த இவர் வில்லனே இல்லை இவர்தான் ரியல் ஹீரோ என மக்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பலருக்கு இவர் தேடி தேடி உதவி செய்தார். இவர் அளவு யாரும் உதவி செய்யவில்லை என்பது முக்கியமான விசயம். ஒரு சிலருக்கு மட்டும் உதவி செய்வதோடு விட்டு விடாமல் எல்லோருக்கும் தேடி தேடி சென்று உதவி செய்தார்.
உண்ண உணவு, உடுத்த உடை, செலவுக்கு பணம் என கஷ்டப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவினார்.புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல உதவினார்.
இவர் இதற்காக தன் சொத்துக்களை 10 கோடி வரையில் அடமானம் வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.சிறந்த மனித நேயர் விருதை ஐநா சமீபத்தில் இவருக்கு வழங்கியது.
இந்நிலையில் கொரோனா பரவலின் போது இந்தியனாக என் கடமையை செய்தேன். அனைவருக்கும் உதவ வேண்டியது கடமை அதைத்தான் செய்தேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை உதவி செய்வேன் என சோனு சூட் கூறியுள்ளார்.
சிறந்த ஆசிய பிரபலங்களில் 50 பேரில் இவரும் ஒருவராக இவர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது







