இசையமைப்பாளர் இமான் . ஒரு காலத்தில் சீரியல்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை அழகாக பிடித்து சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ஆகி விட்டார்.
ஆரம்பத்தில் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக சதை பிடிப்புடன் இமான் காணப்பட்டார். ஆனால் சில வருடங்களாக அதற்கு எதிர்மாறாக மிகவும் ஸ்லிம்மாக காணப்படுகிறார் இமான். இது எப்படி சாத்தியம் என ஒரு தனியார் சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது.
இது ஒரு ஆர்ட்டிபிஷியலான வேலை இல்லை எளிதான வேலைதான். கஷ்டமான ஒர்க் அவுட் மற்றும் டயட் கண்ட்ரோலில்தான் உடல் எடையை குறைக்க முடிந்தது. எனக்கே என் உடலை பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. வெளிநாடுகள், ஊர்களில் எல்லாம் போய் கச்சேரி செய்யும்போது பார்க்க ப்ரசண்டபிள் ஆக தெரிய வேண்டும். ஆனால் அப்படி இல்லாத காரணத்தால் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தேன். முதலில் நான் என் புகைப்படங்களை பார்க்கும்போது என்ன உடம்பு ஒரு மாதிரியாக இருக்கிறதே டிரஸ் சரி இல்லையோ என நினைப்பேன் அப்புறம்தான் புரிந்து கொண்டேன் மாத்த வேண்டியது டிரஸ்ஸை இல்ல உன் உடம்ப என நினைத்துக்கொண்டேன் என தன் உடல் எடை குறைத்த ரகசியத்தை ஜாலியாக கூறியுள்ளார் இமான்.







