கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் அறிமுகமாகி அதற்கு பிறகு பல்வேறு விதமான கிராமத்து படங்களில் நடித்து விட்டவர் நடிகர் தவசி. இவர் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கருப்பன் குசும்புக்காரன் என இவர் பேசும் காமெடி வேடம்தான் இவரை உலகறிய செய்தது.
இந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்தே படத்திலும் இவர் நடிக்க இருந்த நிலையில் திடீரென தாக்கிய புற்றுநோயால் இவரது வாழ்க்கை நிலைகுலைந்தது.
புற்றுநோயால் இவரின் உடல் உருகி மிக மோசமான நிலைமைக்கு சென்று விட்டார். தற்போது இவரை நடிகரும் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏவுமான டாக்டர் சரவணன் தனது மருத்துவமனையில் அனுமதித்து பார்த்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் #Thavasi அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார்.







