கடந்த மார்ச் மாதம் கொரோனா எனும் கொடிய பேரரக்கன் வந்த நேரத்தில் வழிபாட்டுத்தலங்கள் பார்க், பீச், மால், தியேட்டர்கள் மூடப்பட்டது. கடும் கொரோனா மரணங்களால் மற்ற அனைத்திற்கும் சிறிது சிறிதாக விலக்கு அளிக்கப்பட்டாலும் தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படவில்லை.
இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அரசுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்த வண்ணம் இருந்தனர். மத்திய அரசு கடந்த மாதமே தியேட்டரை திறந்து கொள்ளலாம் என அனுமதி அளித்து விட்டது.
இருப்பினும் தமிழ்நாடு அரசு அநேகமாக நவம்பர் 10ல் தியேட்டர் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது. இதன் மூலம் தீபாவளிக்கு மாஸ்டர், சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் படங்கள் ரிலீஸ் ஆகி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.







