ஆந்திராவில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ராமாநாயுடு அந்தக்காலங்களில் வசந்த மாளிகை உள்ளிட்ட படங்களை தமிழில் தயாரித்தவர். இவரின் மகன் நடிகர் வெங்கடேஷ். 80களில் தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்து விட்ட வெங்கடேஷ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது 59வயதாகும் வெங்கடேஷ் ஆந்திராவின் முன்னணி நடிகராவார்.
இவர் ஒரு நினைவுப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 1989ல் இவர் நடித்து வெளிவந்த சத்ரு என்ற படம் தமிழில் வந்தது. இவருடன் இணைந்து நடித்தது நடிகை விஜயசாந்தி.
தமிழில் எங்கள் கம்பெனியான சுமந்த் ஆர்ட் புரொடக்சன்ஸ் இப்படத்தின் மூலம்தான் மெட்ராஸில் காலடி எடுத்து வைத்தது என தன் இனிமையான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.







