---Advertisement---

வயதான மூதாட்டிக்காக மனம் இரங்கி வீடு வரை வந்த மதுரை கலெக்டர்

Published on: December 15, 2020
---Advertisement---

மதுரை கலெக்டராக இருந்த டிஜி வினய் சில நாட்களுக்கு முன் மாறுதலாகி சென்றார். தற்போது மதுரை கலெக்டராக திரு அன்பழகன் இருக்கிறார். இவர் ஏற்கனவே கரூர் மாவட்ட கலெக்டராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து புகழ்பெற்றுள்ளார்.

வயதான மூதாட்டி ஒருவர் வீட்டுக்கு கூட பரிவுடன் சென்றுள்ளார். இது போல் நேற்று திங்கட்கிழமையாதலால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் வந்து கொண்டிருக்கையில் ஒரு மூதாட்டி உடல் நலம் குன்றிய நிலையில் மோசமாக அமர்ந்திருந்தார். இதை பார்த்த கலெக்டர் அந்த மூதாட்டியிடம் விசாரிக்கையில் அந்த மூதாட்டி கோரிப்பாளையத்தை சேர்ந்த பாத்திமா சுல்தான் என தெரிய வந்தது.

என்னவென்று அந்த பெண்ணிடம் விசாரிக்கையில் தான் ஏற்கனவே வசித்து வந்த வீட்டை வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதும், ஏற்கனவே தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை தராமல் இழுத்தடித்ததும் அதன் மீது நடவடிக்கை எடுக்க அந்த பெண் வேண்டினார். உடனே கலெக்டரின் காரிலேயே அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கலெக்டர் அந்த பெண்மணியின் வீட்டுக்கு சென்றார். அட்வான்ஸ் பணத்தை தரமாட்டேன் என சொன்ன வீட்டு உரிமையாளரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். கலெக்டர் மற்றும் போலீஸை பார்த்த அந்த வீட்டுக்காரர் பயங்கர அச்சமடைந்தார். விரைவில் பணத்தை கொடுத்து விடுவதாக உறுதி கூறினார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டு பெற்று வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!