மும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 ஐபிஎல் மற்றும் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இந்தியாவ திரும்பினார்.
இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தீவிர சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவரிடம் இரண்டு வாட்ச் இருந்துள்ளன. ஒரு வாட்ச்சை அவர் கையிலும் மற்றொரு வாட்ச் அவரது பையிலும் இருந்தது.
அதில் ஒன்று தங்க வாட்ச் என்று கூறப்படுகிறது. இதன் இரண்டு வாட்ச்சின் மதிப்பு ரூ. 5 கோடி. சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வாட்ச்களுக்கான பில் குறித்து விசாரித்த போது உரிய பில் இல்லை என்று தெரிகிறது.
இதனால் ஹர்திக் பாண்டியாவிடன் இருந்த 2 வாட்ச்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அவரிடம் தீவிர சோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் பில் இல்லாமல் அதிக மதிப்புள்ள தங்கம் எடுத்து வந்த காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.









