---Advertisement---

கமலோட இந்த படம் வந்து 42 வருசம் ஆச்சா

Published on: October 29, 2020
---Advertisement---

கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்புக்கு எத்தனையோ படங்களை உதாரணமாக சொல்லலாம். கமல் பெரிய மீசை வைத்து எந்த படத்தில் நடித்தார் என பலரை கேட்டால் டக்கென சொல்வார்கள் தேவர் மகன், மகராசன் என்று ஆனால் அதற்கு முன்பே கமல் மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில் பெரிய மீசை வைத்து நடித்து விட்டார்.

மனிதரில் இத்தனை நிறங்களா என்றொரு படத்தை பிரபல இயக்குனர் ஆர்சி சக்தி இயக்கினார் இது ஒரு வித்தியாசமான காதல்  கதையம்சம் உள்ள படம். கமல் சைக்கிள் கடை வைத்திருப்பார் மீசை பெரிதாக வைத்து நடித்திருப்பார் ஸ்ரீதேவி இப்பட கதாநாயகி என்றாலும் படத்தில் கமலுக்கு ஜோடி அவர் இல்லை

படத்திற்கு ஸ்யாம் என்றொரு இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார். அவரின் இசையில் மழை தருமோ என் மேகம் என்ற பாடலை அறிந்திருக்காதார் யாருமில்லை.இப்படத்தில் அப்பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது.

சிகப்பு ரோஜாக்கள் படத்துடன் இப்படம் வெளிவந்தது சிகப்பு ரோஜாக்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்ததால் மனிதரில் இத்தனை நிறங்களா படம் பேசப்படவில்லை.

இன்றுடன் இப்படம் வந்து 42 வருடங்களாகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.