---Advertisement---

40 வருடத்தை நிறைவு செய்த மூன்றாம் பிறை – திரைப்படம்

Published on: February 19, 2022
---Advertisement---

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூன்றாம் பிறை. கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலரானோர் நடித்திருந்த படம் இந்த திரைப்படம்.

இந்த திரைப்படம் கடந்த 1982ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த திரைப்படமாகும். இசைஞானி இளையராஜா இசையமைத்து பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆன படமாகும்.

குறிப்பாக மறைந்த புகழ்பெற்ற பெரும் கவிஞர் கண்ணதாசன் கடைசியாக பாடல் எழுதிய படமாகும். கண்ணே கலைமானே என்ற கண்ணதாசன் எழுதிய பாடலுடன் அவர் மறைந்தார். இன்றளவும் அப்பாடல் மறையவில்லை.

மனநலம் குன்றிய ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவளை காப்பாற்றி கரை சேர்க்கும் இளைஞனையும் அந்த பெண்ணையும் சுற்றி பின்னப்பட்ட கதை.

இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசனின் நடிப்பையும் இப்படத்தில் மறக்க முடியாது.

இன்றுடன் இப்படம் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

பாலுமகேந்திராவுக்கு இயக்கியதில் சிறப்பான படமாகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.