---Advertisement---

ஒரே மாதத்தில் 3000 பேர் மரணம்! ஊரடங்கிலும் அடங்காத மாஃபியாக்கள்!

By Sri
Published on: April 29, 2020
---Advertisement---

மெக்ஸிகோ நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3000 மாஃபியாக்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பலியாகியுள்ளனர்.

போதைபொருட்கள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் மெக்ஸிகோ நாட்டின் மாபியா குழுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த கடத்தல் குழுக்களை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால்  மாஃபியா குழுக்களுக்கு இடையிலான தகராறு பெரிதாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் மாபியா குழுக்கள் தங்களுக்கு இடையேய பயங்கர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில் கடந்த மாதம் மட்டும் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது அந்த நாட்டில் கொரோனாவாவால் இறந்தவர்களை விட அதிகம். இதுகுறித்து அந்நாட்டின் அதிபர் ஓப்ரடார், “நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போதும், மாபியாக்களின் செயல்கள் கவலையளிக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.