பாக்யராஜ் நடிப்பில் கடந்த 1992ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, கல்யாணக்குமார், செம்புலி ஜெகன், மனோராமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்திருந்தார். ஊரில் கெளரவமான குடும்பத்தை சேர்ந்த பாக்யராஜ் மைனர் போல சுற்றி வருகிறார்.
படித்த பணக்கார பெண்ணாண ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். திருமணம் வரை செல்லும் நிலையில் படிப்பறிவில்லாத பாக்யராஜை திருமணம் செய்ய மறுக்கிறார் ஐஸ்வர்யா.
இதனால் ஏற்படும் குழப்பங்களும் நடுவில் பாக்யராஜ் கல்யாணகுமார், மனோரமா தம்பதிகளின் உண்மையான வாரிசு இல்லை என்ற தகவலும் பாக்யராஜுக்கு தெரிய வருகிறது.
இப்படியொரு சூழலில் பயணிக்கும் கதைதான் இப்படத்தின் கதை.
இந்த படம் மிகப்பெரும் வெற்றிப்படமானது.
இன்றுடன் இப்படம் வெளியாகி 29 வருடங்களை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
பஞ்சு அருணாசலம் தயாரிக்க பாக்யராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்.







