---Advertisement---

கொரோனா தடுப்பூசி 25 லட்சம் பேருக்கு இலக்கு

Published on: October 3, 2021
---Advertisement---

தமிழகத்தில் 4-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம்இடங்களில் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும் 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும் 26-ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், 4-வது கட்டமெகா முகாம் இன்று தமிழகம்முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 25 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளன என அமைச்சர் சுப்ரமணியன் கூறியுள்ளார்

 

 

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!