கடந்த 2018ல் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்து விட்டு சென்றது.
புயலால் அதிகமானவர் வீடுகளையும், மரங்களையும், கால்நடைகளையும் இழந்தனர் அவர்களுக்கு மின்சாரம் உள்ளிட்டவைகள் திரும்ப கிடைக்க அதிக நாட்கள் ஆனது.
இந்நிலையில் இதே போல் மிரட்டுவதற்கு மீண்டும் ஒரு புயல் வருகிறது. புயலின் பெயர் நிவார் என பெயரிடப்பட்டிருக்கிறது. இது இன்னும் 24மணி நேரத்தில் வலுப்பெற்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. நிவார் புயல் மீண்டும் எந்த பகுதிக்கும் வந்து விடக்கூடாது என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.
தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவிலும், புதுவையில் இருந்து 700கிமீ தொலைவிலும் உள்ளது.







