இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய். இவர் தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகருடன் மோதல் போக்கை சில வருடமாகவே கடைபிடிப்பதாக தெரிகிறது. கடந்த வருடமே தன்னை கேட்காமல் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை எஸ்.ஏ சந்திரசேகர் அறிவித்ததற்கு விஜய் கடுமையாக கோபப்பட்டார்.
இந்நிலையில் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நிற்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டதால் தனது பெயரை தனது ரசிகர் மன்ற இயக்கத்தின் பெயரை தன்னை கேட்காமல் பயன்படுத்தக்கூடாது சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடுத்துள்ளார்.







