---Advertisement---

வலிமை பட ரிலீஸ் உறுதியான இறுதியான தேதி

Published on: January 4, 2022
---Advertisement---

வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்ப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமையின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜனவரி 13 முதல் பெறுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 30ம் தேதி, வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக இப்படம் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 700 லிருந்து 750 தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.