---Advertisement---

மாஸ் ஹீரோவாக விளங்கும் மோகன்லால், விந்ஸ்மேரா விளம்பரத்தில் மென்மையை வெளிப்படுத்திய துணிச்சல் – இது சாதாரண விளம்பரம் கிடையாது!

By Sri
Published on: July 20, 2025
---Advertisement---

மோகன்லால் என்னும் பேரறிஞர் நடிகர் எப்போதுமே தனக்கே உரிய நடிப்புத் திறமையால் தமிழ் ரசிகர்களிடமும் தனி இடம் பிடித்தவர். என்னதான் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும், அவரோட ஸ்கிரீன் பிரெஸன்ஸ், அந்த பார்வை, அந்த பேச்சு எல்லாம் இன்னும் ஒரு லெவல்தான். இப்போ அவர் நடித்திருக்கும் வின்ஸ்மேரா ஜூவல்ஸ் விளம்பரம் பார்த்தவங்க, “இது ஒரு சாதாரண அட்வர்டைஸ்மெண்டா?”னு கேட்பாங்க. ஏனென்றால் அந்தளவுக்கு அதுவொரு உணர்வுபூர்வமான கலைக்காட்சிதான்.

இது ஒரு விளம்பரமா? இல்ல… ஒரு கலைக்காட்சி!
மாஸ் ஹீரோ மோகன்லால், மென்மையோடு மனதை கொள்ளை அடிக்கிறார்
வின்ஸ்மேரா விளம்பரம் – நடிப்பின் எல்லையை தாண்டிய அழகு!

அதுல மோகன்லால், எவ்வித வசனமுமில்லாம, தன் கண்கள், கைசைகை, மெல்லிய நடையால் ஒரு மென்மையான தன்மையை வெளிப்படுத்துறார். இது எந்த விதத்திலும் காமெடியாக இல்லை. இது அவங்க நடிப்பின் ஒரு புதிய பரிமாணம். வணப்புடன் ஒரு நகை அணிவது பெண்களுக்கு மட்டுமா? என்பதற்கு நேரடி பதில்தான் இந்த விளம்பரம். மிக மென்மையான நடனக் காட்சிகள், ஹீரோயினாக இல்லாமலேயே அந்த மென்மையை அவர் கையாண்ட விதம் — அதுக்கே ரசிகர்கள் கைதட்டுறாங்க.

இது அவர் நடிப்புலே புதுசா வந்த விஷயமில்லை. ‘வனபிரஸ்தம்’ (1999) என்ற கலைப்படத்தில் அவர் ஒரு கதகளி கலைஞராக நடித்திருக்கிறார். அந்தப்படத்தில் பெண் கதாபாத்திரங்களை மேடையில் நடிக்கும் போது அவருடைய முகபாவனைகளும், உடற்கட்டுப்பாடும், மென்மையும் — அசத்தல்தான். அது இந்திய சினிமாவில் பெருமைப்படவேண்டிய ஒரு உயர்ந்த நுணுக்கமான நடிப்பு. அதற்கே கான்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புப்பரிசு கிடைத்தது.

அதேபோல் ‘கமலதலம்’ (1992) படத்தில் அவர் ஒரு பாரதநாட்டியம் ஆசானாக நடிக்கிறார். அந்த படத்திலும் அவர் ஒரு ஆணாக இருக்கும்போதும், நடனத்தின் லாஸ்யா பகுதியை மென்மையாக சைகையால் எடுத்துரைக்கும் காட்சிகள் உள்ளன. இது போன்ற அனுபவங்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கோம். ஆனால் இப்போ ஒரு ஜூவலரி விளம்பரத்துல இப்படியா ஒரு விசுவாசமான நடிப்பு வரும்னு யாரும் எதிர்பார்க்கல.

இது ஒரு சூடான சூப்பர் ஸ்டாருக்கு சாதாரணமா தோன்றக் கூடாது. ஆனா மோகன்லால் என்றாலே அவர் எல்லா கதாபாத்திரத்தையும் ஒரு கலையாகவே பார்ப்பவர். இது அவர் ‘மாஸ் ஹீரோ’ என்பதற்கே ஒரு புதிய வரையறை. “தலைவன் என்பது சத்தமில்லாம சொல்லும் விஷயத்தை உணர்த்தும் வல்லமை” என்றால் அது தான் இங்க நடக்கிறது.

விளம்பர வீடியோவின் கடைசி சிரிப்பில் கூட ஒரு கலைஞரின் சுதந்திரம், புண்ணிய உணர்வு தெரிகிறது. இது ஒரு நகை விளம்பரம் இல்லை. இது நடிப்பின் மீதுள்ள அன்புக்காக, தன்மையின் எல்லைகளை மீறுவதற்காக, கலையை வாழ்த்துவதற்காக வந்த ஒரு அபாரமான முயற்சி.

மோகன்லால் அப்படி ஒருத்தர். அவங்க எல்லாம் ஒவ்வொரு முறையும் வரம்பை தாண்டுறாங்க. அந்தவங்கதான் எப்போதுமே நம்ம ரசிகருள்ள நிறைய இடம் பிடிக்கிறாங்க. இந்த விந்ஸ்மேரா விளம்பரம் — அது ஒரு துணிச்சலான கலைச் செயலாகும். மென்மை என்பது பலவீனமல்ல, அது அழகான வெளிப்பாடு என்பதை நன்கு நிரூபித்திருக்கும் மோகன்லால், மீண்டும் ஒருமுறை தன் தகுதியை நிரூபித்திருக்கிறார்.


Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!