---Advertisement---

நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி!

By Sri
Published on: February 23, 2019
நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி
---Advertisement---

ஃபிரண்ட்ஸ் உட்பட தமிழில் பல படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. அதன்பின் அவர் பல படங்களில் நடித்தார்.  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.

இதுபோக தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென விஜயலட்சுமி இன்று நண்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.