---Advertisement---

தர்ஷன் வெளியேற்றமா? – ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்

By Sri
Published on: September 29, 2019
darshan
---Advertisement---

பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறி விட்டார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கவினுக்கு அதிகம் பேர் வாக்களித்ததால் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார். இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவருக்கு முன் சேரன் வெளியேற்றப்பட்டதும் பலருக்கும் பிடிக்கவில்லை.

இந்த வாரம் எபப்டியும் ஒருவர் வெளியாக வேண்டும். கோல்டன் டிக்கெட்டை பெற்று முகேன் இறுதி போட்டியாளராக தேர்வாகி விட்டார். தற்போது எவிக்‌ஷன் நாமினேஷனில் சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரும் உள்ளனர்.

twit 1

இதில், இந்த வாரம் தர்ஷன் வெளியேறுகிறார் என்கிற செய்தி நேற்று சமூகவலைத்தளம் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் விஜய் டிவிக்கு எதிராக #RedLightChannelVijayTV என்கிற ஹேஷ்டேக்கில் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். பலரும் இந்த ஹேஷ்டேக்கில் டிவிட் போட நேற்று இரவு இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உண்மையிலேயே தர்ஷன் வெளியேறுகிறாரா என்பது இன்று இரவுதான் தெரியவரும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.