---Advertisement---

கோவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’; அடிக்கல் நாட்டினார் எஸ்.பி வேலுமணி!

By Sri
Published on: March 10, 2019
Coimbatore Smart City project
---Advertisement---

கோவையில், இன்று 224 கோடி 10 லட்சம் ரூபாயில் ஸ்மார்ட் ஸிட்டி திட்டத்தின் கீழ் அமைக்க உள்ள நகரங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

கோவை பெரிய குளத்தின் கரையை புரண் அமைத்து மேம்படுத்த ரூ. 62 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்வசிந்தாமணி கரையை புரண் அமைக்க 31 கோடியே 47 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திவான்பகதூர் சாலையில், அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் அமைக்க 40 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எல்.ஈடி பல்புகள் அமைக்க 74 கோடியே10 லட்சம் ரூபாயும், சிவராம் நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தில் 14 கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

எனவே, மொத்தம் 224 கோடியே 10 லட்சம் மதிப்பிலான இத்திட்டத்தை எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.