---Advertisement---

நான் சமூகவலைதளத்துக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது – அஜித் கடிதத்தால் குழப்பு !

By Sri
Published on: March 7, 2020
Ajith Birthday 2019
---Advertisement---

நடிகர் அஜித் தான் சமூகவலைதளத்துக்கு வரப்போவதாக கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

நடிகர், அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்குமான தொடர்பு திரையில் அவரது படங்களை பார்த்து மகிழ்வதோடு முடிந்துவிட வேண்டும் என நினைப்பவர் அஜித். அதற்காகதான் தனது ரசிகர் மன்றங்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கலைத்தார். அதே போல மற்ற நடிகர்கள் அனைவரும் சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் வேளையில் அஜித் அங்கேயும் ஆப்செண்ட்தான்.

இந்நிலையில் அஜித் எழுதியதாக ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் பரவியது. அதில் ’நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த கடிதத்தில் இருந்தது.

இந்நிலையில் இந்த கடிதம் உண்மையில்லை என அஜித் ரசிகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.